வாழைப்பழ தோலில் உள்ள காபனில் இருந்து வாகன ரயர்களில் உள்ள காபன்கள் வரைக்கும் மீண்டும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான செயன்முறை ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அதாவது குறித்த காபன்களை கிரபீன் துணிக்கைகளாக மாற்றுவதே இச் செயன்முறையாகும்.
இதற்காக காபன் மாசுக்கள் அனைத்திற்கும் சுமார் 2,727 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வழங்கப்படும்.
இதன்போது காபன்களுக்கு இடையிலான பிணைப்புக்கள் உடைக்கப்படும்.
அதன் பின்னர் சில மில்லின் செக்கன்களில் உடைக்கப்பட்ட காபன் துணைக்கைகள் அனைத்தும் கிரபீன் ஆக மாற்றப்படும்.
இச் செயன்முறையினை வைரஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.