அனைத்து பயனர்களுக்கும் Off-Facebook Activity வசதி

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடத்தில் சில நாடுகளில் உள்ள பயனர்களுக்கு Off-Facebook Activity எனும் வசதியை வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் இவ் வசதி வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இவ் வசதியானத பேஸ்புக் வலைத்தளத்தினை பயன்படுத்தாத சந்தர்ப்பத்தில் ஏனைய இணையத்தளங்களைப் பயன்படுத்தும்போது பேஸ்புக் எவ்வாறான விபரங்களை சேகரிக்கரிக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

எனவே பயனர்கள் தமது பேஸ்புக் கணக்கு பற்றி தெளிவாகவும், பயமின்றியும் இருக்க முடியும்.

மேலும் இவ்வாறு சேகரிக்கப்படும் விபரங்களின் சாராம்சத்தினையும் குறித்த வசதியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.