கூகுள் நிறுவனம் ஹேக்கர்களுக்கு சுமார் 6.5 மில்லியன் டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.
இது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 50 கோடி ரூபாய்கள் ஆகும்.
2019 ஆம் ஆண்டில் இணையத்தளப் பாதுகாப்பிற்கு உதவி செய்தமைக்காக இப் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
Vulnerability Reward Programs (VRPs) எனும் திட்டத்தின் கீழ் இப் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் தயாரிப்புக்களான குரோம் மற்றும் அன்ரோயிட் என்பவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து கூகுளிற்கு தெரிவிப்பதன் மூலம் இணையப் பாதுகாப்பிற்கு குறித்த ஹேக்கர்கள் உதவிபுரிந்துள்ளனர்.
கூகுள் நிறுவமானது 2010 ஆம் ஆண்டு முதல் Vulnerability Reward Programs (VRPs) திட்டத்தினை அறிமுகம் செய்து இவ்வாறு பரிசுத்தொகைகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.