பூமியின் ஒழுக்கில் பயணம் செய்துகொண்டிருக்கும் இரு செயற்கைக்கோள்கள் இவ் வாரத்தினுள் ஒன்றுடன் ஒன்று மோதக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட IRAS எனும் செயற்கைக்கோளும், 1967 ஆம் ஆண்டு ஏவப்பட்ட GGSE-4 எனும் செயற்கைக்கோளுமே இவ்வாறு மோதவுள்ளன.
இவற்றில் IRAS ஆனது 1,083 கிலோ கிராம் எடை கொண்டதாகவும், GGSE-4 ஆனது 4.5 கிலோ கிராம் எனும் குறைந்த எடை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இவற்றின் சார்பு வேகமானது செக்கனுக்கு 14.7 கிலோ மீற்றர்களாக இருக்கின்றது.
எவ்வாறெனினும் தமது ஒழுக்கில் ஒன்றினை ஒன்கு குறுக்காக கடக்கவுள்ள இவ்விரு செயற்கைக்கோள்களும் மோதக்கூடிய சாத்தியம் நூறில் ஒன்றாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.