ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் கைகோர்க்கும் நாசா..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஐரோப்பிய விண்வெளி மையமான ஈசாவுடன் கைகோர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூரியனை ஆய்வு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் விண்வெளி ஆய்வு மையங்கள் முனைப்புக்காட்டிவருகின்றன.

இதேபோன்று நாசாவும் சூரியனின் வட துருவம் மற்றும் தென் துருவங்களை ஆய்வு செய்யவுள்ளது.

இதற்காகவே ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் கைகோர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையமானது எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி Solar Orbiter எனும் விண்கலத்தினை விண்ணில் ஏவவுள்ளது.

United Launch Alliance Atlas V எனும் ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவப்படவுள்ளது.

இவ் விண்கலமானது வெள்ளி கிரகத்திற்கும் பூமிக்கும் இடையில் நகர்ந்து சூரியனை ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.