Galaxy Z Flip கைப்பேசியின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகின

சாம்சுங் நிறுவனம் Flip முறையிலான ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் Galaxy Z Flip எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் என்பன வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2636 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

இதன் இரண்டாம் திரையானது 1.06 அங்குல அளவு, 300×116 Pixel உடையதாக இருக்கின்றது.

இதில் Qualcomm Snapdragon 855 processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 256GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

தவிர 10 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் இக் கைப்பேசியானது 1,400 அமெரிக்க டொலர்கள் ஆகும்.