பெண்களுக்கு முக்கியமான ஒன்று மாதவிடாய். அந்த காலதில் என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்
- தூய்மையாய் இருக்க வேண்டும்
- எளிதான உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
- போதுமான அளவு நல்ல சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும்.
- தூய்மையான பருத்தி துணி அல்லது நாப்கின் போன்றவற்றை இரத்தப் போக்கை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும்.
- துணியை மீண்டும் உபயோகப்படுத்துபவராக இருந்தால் நன்றாக துவைத்து பின் டெட்டால் போட்டு நல்ல வெயிலில் காயவைத்த பின் உபயோகப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொற்று கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது.
- இரத்தப்போக்கிற்கு ஏற்ப அணையாடையை அவ்வப்போது மாற்றி கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே துணியையோ அல்லது 8 நாப்கினையோ உபயோகப்படுத்தினால், அதனால் பல தொற்று நோய் ஏற்பட வழி உண்டு.
- காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்
- நாப்கின் உபயோகப்படுத்துபவராக இருந்தால் அதை மாற்றும் போது கழிப்பறையில் போடக்கூடாது. அது போய் கழிவு நீர் குழாயை அடைக்க வாய்ப்புள்ளது. எனவே ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போடுவது நல்லது.
- மாதவிடாயின் போது அடிவயிற்சில் சிலருக்கு வலி வருவது இயற்கை, அதற்கு சூடான நீரை அடிவயிற்றில் ஒத்தடம் கொடுத்தால்குறைந்து விடும். முதுகு வலி ஏற்பட்டால் குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்தால் சரியாகி விடும்