பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் லாஸ்லியா .தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இலங்கை நாட்டை சேர்ந்த பிரபல செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா பங்குபெற்றார் .இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போதே சக போட்டியாளரான பிரபல சின்னத்திரை நடிகர் கவின் மீது காதல் ஏற்பட்டு பின்பு பல பிரச்சனைகளை சமாளித்து இவர் அந்த நிகழ்ச்சியின் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். தற்போது பிரபல நாளிதழ் ஒன்று மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கடந்த 2019 ஆண்டு மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி பெண்கள் வரிசையில் லாஸ்லியா இரண்டாம் இடத்தைப் பெற்றார். இந்த நாளிதழ் மேற்கொண்ட ஆய்வில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் லக்ஷ்மி ஸ்டோரில் நடித்துவரும் நட்சத்திரா முதலிடத்தை பெற்றார்.
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவை உங்களுக்கு யாருக்கெல்லாம் பிடிக்கும் மேலும் அவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா என்பது பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.