தல அஜித்துக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு D40 என தற்போது பெயரிடப்பட்டுள்ளது. Ynot Studios சார்பில் சசிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனிலும் பிறகு மதுரையிலும் நடைபெற்றது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்பதை பெப்ரவரி 9ம் திகதி அறிவிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை அஜித் பிறந்த நாளான மே 1ம் திகதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் தனுஷுடன் சஞ்சனா நட்ராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.