அரசியல் கட்சியில் இணைந்த இயக்குனர் பேரரசு!

விஜய், அஜித் என பல முன்னணி தமிழ் ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர் இயக்குனர் பேரரசு. அவர் நடிகர் விஜய்க்கு கதை கூறியிருக்கிறார் என்று கூட செய்திகள் வந்தது. ஆனால் அவருக்கு விஜய்யை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது பேரரசு அரசியலில் குதித்துள்ளார். பாஜகவில் அவர் இணைந்துள்ளார். அந்த கட்சியின் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார்.

மோடியால் ஈர்க்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பேரரசு தெரிவித்துள்ளார்.