வாட்சப்பில் வரப்போகும், அத்தியாவசிய அப்டேட்.!

இன்றைய நவீன உலகில் வாட்ஸ்அப் இன்றி எதுவும் இல்லை என்றாகிவிட்டது. அனைத்து ஆன்ராய்டு மொபைல்களிலும் நிச்சயம் வாட்ஸ்அப் செயலி இடம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடந்து வருகிறது. அதற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனமும் பல்வேறு புதிய வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகிறது.

காலையில் நாம் எழுவது முதல் இரவு படுக்க செல்லும் வரை வாட்ஸ்அப் இன்றி நாம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த செயலியை கொண்டு டெக்ஸ்ட், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வாட்சப் நிறுவனம் அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்து வருவது தான். இந்நிலையில், தற்போது டிஜிட்டல் பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே, விரைவில் வாட்ஸ் அப் பேமெண்ட் அம்சத்தை களமிறக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக Facebook நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.