திருமணம் முடித்த உடனே யாஷிகாவுடன் இணைந்த மஹத்..!

நேற்றைய முன்தினம் தான் மஹத் – பிராச்சி  திருமணம் முடிந்தது. இந்த திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்து காதல் ஜோடியை வாழ்த்தி சென்றார்கள். முன்னதாக மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொது யாஷிகாவுடன் நெருங்கி பழகி வந்ததை ஒட்டி பல வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மையில்லை என்று தெரிந்துவிட்டது.

தற்போது, திருமணம் முடிந்த கையுடன் வரும் ஒரு செய்தி என்னவென்றால், மஹத் யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் பிரியாணி இயக்குனர் வெங்கட் பிரபு முக்கியவேடத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது. மேலும், பிரபல கன்னட நடிகையான பிரியங்கா உபேந்திரா இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இதை தொடர்ந்து, தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகும் இப்படத்தை மகேஷ் ராம் என்பவர் இயக்குகிறார். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். RV பரதன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தைப்பற்றிய மற்ற தகவல்கள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹத்தின் திருமணத்திற்கு சிம்பு வந்தது குறிப்பிடத்தக்கது.