தியானம் செய்யும் போது இசை கேட்பதால் என்ன நடக்கும்?

அப்படியெனில் நிச்சயம் உங்களுக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வர் அதிகமாக இருக்கும். தியானம் செய்யும் போது இசை கேட்பதால் என்ன தான் நடக்கும்? தியானம் என்பது எந்த ஒரு இடையூறும் இல்லாமல், அமைதியாக உள்ள இடத்தில் செய்ய வேண்டியது.

அப்போது இசை கேட்பது என்பது மிகவும் தொந்தரவான ஒன்று என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால்இ உண்மை என்னவென்றால் நீங்கள் நினைப்பதற்கு அப்படியே தலைகீழானது.

தியானம் செய்யும் போது இசை கேட்பது என்பது உங்களது கவனத்தை சிதறாமல்

அதற்கென குத்தாட்டம் போடும் படியான பாடலை கேட்க கூடாது?

இன்னிசை மெல்லிசை போன்ற அமைதியான பாடல்களை கேட்க வேண்டும். தியானம் செய்யும் போது இசை கேட்பதால் கிடைக்கும் மேலும் சில நன்மைகளை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

தியானம் செய்யும் போது இசை கேட்பதால் கிடைக்கும் நன்மைகள்:

தியானம் என்பதே மனதை அமைதிப்படுத்துவதற்கு தான். அப்படிப்பட்ட அமைதி நிலையில் மனதிற்கு இனிய இசையை கேட்கும் போது மனமானது மிகுந்த அமைதிக்கு உள்ளாகும். மெல்லிசையானது அமைதியான சூழலை உருவாக்குவதால் தியானத்தால் கிடைக்கும் நன்மைகள் மேலும் அதிகமாக கிடைக்கக்கூடும்.

கவனத்தை அதிகரிக்கும்

மேலே கூறியது போலவே தியானம் செய்யும் போது கவனச்சிதறம் அதிகமாக இருக்கத் தான் செய்யும். அதுவே நீங்கள் இசையோடு தியானம் செய்து பாருங்கள். உங்கள் கவனம் அதிகரிப்பதை நீங்களே உணரலாம். தீவிர தியானத்தில் நீங்கள் ஈடுபட வேண்டுமென்றால்இ இன்னிசை மெல்லிசை போன்றவற்றை கேட்டுக் கொண்டு தியானம் செய்யலாம். இதன்மூலம் உங்கள் அறிவாற்றலும் அதிகமாகும். கவன சிதறலும் குறையும்.

செரிமானத்தை சீராக்கும்:

உண்ணும் உணவில் பலருக்கு கட்டுப்பாடு என்பதே இருக்காது. அதுவே இசையை கேட்டுக்கொண்டே தியானம் செய்து பாருங்கள் எப்படிப்பட்ட சாப்பாட்டு பிரியரும் தங்களது உணவில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் அதனை செய்ய முடியும். உடல் எடை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்களும் நிச்சயம் இசையுடன் கூடிய தியானத்தை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

உடலை விரைவில் குணப்படுத்தும்:

மனதிற்கு இனிய மெல்லிசையை கேட்டுக் கொண்டே தியானம் செய்வதன் மூலம் உடலை விரைவில் குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சைக்கு பின்பு தியானம் செய்பவர்கள் மெல்லிசையை கேட்டுக் கொண்டே தியாகம் செய்தால் உடல் சீக்கிரமே குணமடைந்துவிடும். அதுமட்டுமின்றிஇ உடலில் இருக்கும் வலி குறைந்தது போலவும் இது உணரச் செய்யும்.

உணர்ச்சிகளை மனநிலைப்படுத்தும்:

எவரொருவர் தியானம் செய்யும் போது இசை கேட்டுக் கொண்டே செய்கிறாரோ அவரது உணர்ச்சிகளானது மனநிலையில் இருக்கும். உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு நிச்சயம் இது உதவும். எப்போதும் மனநிலையற்ற உணர்ச்சிகளோடு எப்போது கோபப்படுவோம்இ எப்போது என்ன செய்வோம் என்றே தெரியாமல் இருப்பவர்கள் இதனை செய்வதன் மூலம்இ அனைத்து பிரச்னைகளில் இருந்தும் சுலபமாக வெளிவர முடியும்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்:

தியானம் செய்யும் போது இசை கேட்பதால் செய்யும் வேலையில் எந்தவொரு தடுமாற்றமும் இல்லாமல் மனதை சாந்தப்படுத்தி ஒழுங்காக பணியை தொடர உதவிடும். மேலும் தியானம் செய்யும் போது இசையைக் கேட்பது உங்களை நிச்சயம் ஈர்க்கும். இது நல்லதொரு மனநிலையை கொடுக்கிறது மற்றும் உங்கள் உடலை நிதானப்படுத்தவும் செயல்பாட்டை மேம்படுத்தவும் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவும்.

பயணத்தை இனிமையாக்கும்: பெரும்பாலானோர் பயணம் மேற்கொள்ளும் போது மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டுக் கொண்டே தான் பயணத்தை மேற்கொள்வர். இதற்கு காரணம் கேட்கும் இசை மனதை சாந்தப்படுத்துவதோடுபயணத்தையும் இனிமையாக்கும். விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் இது ஒரு அருமருந்து என்றே சொல்லலாம். பயணிக்கும் போது இசையை கேட்டு பாருங்கள் உங்கள் மனம் அமைதியாக எதை பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக இருக்கும்.