இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும் உணவு..!

சேப்பங்கிழங்கு செடியினத்தைச் சேர்ந்தது. இது வழவழப்பான தன்மையுடையதாக இருக்கும். சேப்பங்கிழங்கில் பற்களையும், எலும்பையும் வலுப்படுத்தக்கூடிய பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துகள் அதிகம் உள்ளது.

சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கவும், கண்பார்வைத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் கழிவு மண்டலத்தில் அழுக்குகள் தேங்குவதைத் தடுப்பதுடன் மலச்சிக்கலையும் தடுக்கிறது.

100 கிராம் சேப்பங்கிழங்கில் 97 சதவீதம் கலோரி உள்ளது. அதுமட்டுமின்றி இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துகள் உள்ளன.

கட்டிகளுக்கும், புண்களுக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது. சேப்பங்கிழங்கை அரைத்து கட்டிகள் மற்றும் புண்களின் மேல் பற்றாகப் போட்டால் விரைவில் குணமடையும். குடல் புண்களை விரைவில் குணப்படுத்தும் தன்மை உடையது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

மேலும் இது நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது. இக்கிழங்கை ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சனையை போக்கலாம்.

இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இக்கிழங்கின் மாவு குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.