சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 17,205 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 2,829 பேராகும்.
உலகளவில் 21,558 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதில், 2,000 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 நாடுகளில் வைரஸ் பரவியுள்ளது. இதேவேளை, சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள தங்கள் பிரஜைகளை அழைத்துச் செல்ல சில நாடுகள் விமானங்களை அனுப்பியுள்ளன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2003 ஆம் ஆண்டில் சீனாவில் பரவிய SARS தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது.