கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு நிழல் என்ற திடடத்தின் கீழ் புதிய அரசின் கொள்கைத்திட்டத்தின் நாடுபூராகவும் இன்றைய தினம் தேசிய நிகழ்வாக வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு வட்டக்கச்சி ஐந்து வீட்டுத்திட்டம் கிராமத்தில் நடைபெற்றது.
ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீடு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் ஒவ்வொரு வீடு அமையவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 95வீடுகள் அமையவுள்ளது.குறித்த வீட்டை இரண்டு மாதத்திற்குள் புனரமைக்க வேண்டும்
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார், அரச உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.