தர்ஷன் – சனம் ஷெட்டி காதல் விவகாரத்தில் தர்ஷனுக்காக குரல் கொடுக்கும் பிக் பாஸ் காஜல்…!

கோலிவுட்டில் சமீபக் காலத்தில் ட்ரெண்டிங் ஹெட்லைன் “தர்ஷன் – சனம் ஷெட்டி” யின் பிரேக்-கப் தான். இதற்கு இருத்தரப்பிலிருந்தும் கடுமையான விவாதம் நடைப்பெற்று வருகின்றன. “தர்ஷன் என்னிடம் இருந்த பணம் அனைத்தையும் நன்றாக அனுபவித்து விட்டு என்னை ஏமாற்றிவிட்டார்” என்று சனம் ஷெட்டி கூறியுள்ளார். மேலும் இதனடிப்படையில் அவர்மீது வழக்குக் பதிவு செய்து ஏழு வருடம் சிறையில் அடைக்கப் போவதாக அவருடைய வழக்கறிஞர் சுமந்த் கூறியுள்ளார்.

ஆனால் தர்ஷன் “சனம் ஷெட்டி எனக்கு உடல் ரீதியாகவும், மனா ரீதியாகவும் பலவிதமான துன்பங்களைக் கொடுத்துள்ளார். சில நேரங்களில் நான் எந்தப் பெண்களிடமும் பேசக்கூடாது, அவ்வாறு பேசினால் கண்டிப்பாக தற்கொலை செய்துக்கொள்வேன் என்று மிரட்டியும் உள்ளார் ” என்று அவரது தரப்பில் அவர் கூறிவந்தார்.

தற்போது பிக் பாஸ் போட்டியாளரான காஜல் “ரெண்டு பேர் மேலயும் தப்பு. ஒருத்தன கஷ்டத்துல பாத்துட்டு சும்மா இருக்குறதுக்கு பேர் லவ் கெடையாது. அது சனம்க்கு புரியும்னு நெனக்கிறேன். தர்ஷன் என்னதான் நல்லவனாக இருந்தாலும் சனம் ஷெட்டிய பிக் பாஸ் போட்டிகப்றம் அவொய்ட் பன்னிருக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.