விமான (ஏயார்பஸ்) ஒப்பந்த மோசடி தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் முன்னாள் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமி விஜயநாயக்க ஆகியோரை பிடியாணை பெற்று கைது செய்ய சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று (03) சிஜடிக்கு இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.
இதன்படி கோட்டை நீதிமன்றை நாடிய சிஐடியினர் பிடியாணை உத்தரவையும் பெற்றுள்ளனர்.