சீனாவிலிருந்து விமானம் மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 254 பேரில் சுமார் 36 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று அறிகுறிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பயணிகளிடம் கொரோனா கிருமித்தொற்று உள்ளதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதன் முடிவுகள் இன்று தெரியவரும் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின் தெரிவித்தார்.
சீனாவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சுக்கு 254 ஐரோப்பியர்கள் தனி விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
இதில் 64 பேர் பிரானஸ் குடியுரிமை உடையவர்கள்.
254 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் 20 பேரை பிரான்ஸின் இஸ்டரஸ் விமான நிலையத்தில் வைத்து சோதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஏனைய 16 பேரையும் அவரவர் நாட்டுக்கு பிரான்ஸ் அரசு அனுப்பி வைத்துவிட்டது என்பது குறிப்பிடத் தக்கது.