இதுவரை இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா..

சூப்பர்ஸ்டார் நடிக்கும் “தலைவர் 168” படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்தது. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் முன்னாள் முன்னணி நடிகைகளான குஷ்பூ, மீனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தற்போதைய முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் நயன்தாரா எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி நயன்தாரா இந்த படத்தில் ஒரு வழக்கறிஞராக நடிக்கவுள்ளார். மேலும்,இந்த கதாபாத்திரத்தில் நயன்தாரா முதன் முறையாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் தங்கையாகவும், மீனா மனைவியாகவும், குஷ்பூ வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.