சில வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பேசப்படும் செய்தியானது பிரபல நடிகை பமீலா ஆண்டர்சனின் 5வது திருமணம். அவர் ஜான் பீட்டர்ஸ் என்பவரை 5வதாக திருமணம் செய்தார்.
மாலிபுவில் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளரான ஜானுக்கு வயது 74 என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் முடிந்து வெறும் 12 நாட்கள் மட்டும் ஆகும் நிலையில் தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி நடிகை அளித்துள்ள பேட்டியில், “எங்கள் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் அன்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு நடுவில் ஒருவருக்கொருவர் என்ன எதிர்பார்க்கிறோம் என மீண்டும் பரிசீலிக்க தற்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம்” என கூறியுள்ளார்.