நடிகர் கவுண்டமணியின் மகள் செய்த காரியம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல ஆயிரம் காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவரை அடிச்சுக்க யாரும் வர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆம் அவர் தான் காமெடி நடிகர் கவுண்டமணி. இந்நிலையில் இப்படி பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் யாருக்கும் தெரியாமல் செய்து வந்த பெரிய உதவி ஒன்று இப்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

அதிலும் நடிகர் கவுண்டணி தன் குடும்பத்தைக் கூட வெளி உலகுக்கு காட்டியது இல்லை.

அப்படி இருக்கும்போது இப்போது எப்படி மகளின் சேவை தெரிந்தது என்பவர்களுக்கு, வெகுநாட்களாக நடந்துவரும் இந்த உதவி தற்போது வெளி வந்துள்ளது சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் வந்து ஒரு தம்பதியினர் உதவி இருக்கின்றனர்.

நீண்டகாலமாக தாங்கள் யார் என்றே காட்டிக்கொள்ளாமல் இருந்த அவர்கள் முதன் முறையாக அதுகுறித்து தெரிவித்தனர். அதுவும் அங்கிருந்தவர்கள் கேட்டுக்கொண்டதினால் சொன்னார்கள் அப்படி ஒவ்வொரு மாதமும் உதவி செய்யும் அந்த பெண்ணின் பெயர் சுமித்ரா. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள்.

அவரும், அவரது கணவர் வெங்கடாச்சலமும் தான் இப்படி ஓசையின்றி பலருக்கு உதவி வருகின்றனர். பரவால நகைச்சுவை நடிகரின் மகள் நிஜத்தில் ஹீரோயின் தான்.