நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு நிலைமையா.?!

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. தற்போது அவர் உடல் எடை கூடிய காரணத்தினால் படவாய்ப்பில்லாமல் இருந்துள்ளார். தற்போது, மீண்டும் அவரது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க அனுஷ்கா தன்னுடைய அவசர புத்தியால் சேர்த்து வைத்திருந்த சொத்தையெல்லாம் தற்போது இழந்துள்ளார்.

அதவாது, இவர் ஐதராபாத்தில் 4 பெட் ரூம் பிளாட் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். தெலுங்கானாவில் ஏற்பட்ட பிரச்சனையால் சொத்து மதிப்பு இழந்து விடும் என அடுத்தவர் சொல்வதை கேட்டு கொண்டு வெறும் ரூ 5 கோடிக்கு அந்த 4 பெட் ரூம் பிளாட்டை விற்றுள்ளார். இன்று அதன் மதிப்பு ரூ 10 கோடிக்கும் மேலாக இருக்குமாம்.

ஆனால், இதோடு நிறுத்தாமல் ரியல் எஸ்டேட் பிஸினஸிற்காக விசாகப்பட்டினத்தில் நிலங்களை வாங்கி வைத்திருந்துள்ளார் அனுஷ்கா. ஆந்திர முதல்வர் அமராவதியை தலைநகராக்க முயற்சி செய்த போது இந்த நிலங்களின் விளையும் ஏறாது என்று எண்ணிய அவர் அந்த இடத்தையும் பாதி விலைக்கு விற்றுள்ளார்.

தற்போது இருக்கும், விசாகபட்டினங்களில் உள்ள நிலங்களும் எக்கச்சக்கமான ரேட்டுக்கு செல்கிறதாம், பாவம் தன்னுடைய அவசர புத்தியால் அனுஷ்கா எல்லாத்தையும் இப்படி இழந்துட்டாரே என்று தற்போது அவர் வருத்தப்படுகிறது டோலிவுட் வட்டாரம்.