நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைபடத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். இப்படத்திற்கு பின் இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று நல்ல பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்த் பட்டி தொட்டியெங்கும் இருக்கும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின்னர் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்து டைட்டில் வின்னராக வரும் அளவிற்கு வாய்ப்பு இருந்தது.
ஆனால், இவர் செய்த சில உள்குத்து வேலைகள் காரணமாக அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. மேலும்,பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் யாஷிகா ஆனந்த்க்கு அதிகம் வருகின்றன.
இவர் தற்போது ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் யாஷிகாவின் “ஜாம்பி” படம் வெளிவந்தது. இந்த படத்திலும் படு கவர்ச்சியாக நடித்திருந்தார் அம்மணி.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றுவார்.
அந்த வகையில் சமீபத்தில் ஸ்ட்ராப் லெஸ் கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஏன்.? இடுப்பு புடிச்சுகிச்சா..? என்று கலாய்த்து வருகிறார்கள்.