நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிந்தது… வெளியான திருமண புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த வருடம் மட்டும் 25 மேற்பட்ட படங்களில் யோகிபாபு நடித்துள்ளார். தற்போது யோகிபாபு கைவசம் 16 படங்கள் உள்ளது. இதை தவிர்த்து பன்னிகுட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், 34 வயது ஆகியும், இன்னமும் திருமணம் ஆகவில்லையே என பல நேர்காணல்களில் திருமணமாகாத வருத்தத்தை நடிகர் யோகிபாபு அப்பட்டமாக வெளிப்படுத்தி வந்தார்.

இதற்கிடையே, நடிகர் யோகிபாபு இன்று காலை மஞ்சு பார்கவி என்ற பெண்ணை மணந்தார். இந்த திருமணம் யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது.

அடுத்த மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.