சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். பிகில் திரைப்படத்துக்கு வாங்கிய சம்பளம் தொடர்பாக விஜய் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் கடந்தாண்டு வெளியான படங்களிலேயே அதிகம் வசூலித்த படம் என படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.
இதை கண்டு எங்கே நம் மீது கை வைத்து விடுவார்களோ என்று பயந்து தனது வலைத்தள பக்கங்களை நீக்கிவிட்டு தப்பி சென்றனர் தேனாண்டாள் பிலிம்ஸ். Already Office இல்லாததால் அங்கு Ride – உம் நடத்த முடியாது என்பதால், எங்கே நமது Twitter Account இருந்தால் பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயந்து எஸ்கேப் ஆகிவிட்டனர்.
மெர்சல் திரைப்படத்தால் சுமார் 10 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் சர்கார் படத்தின் விநியோக உரிமையை கொடுத்தால் இழப்பை சரி செய்துவிட முடியும் என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நடிகர் விஜய் தரப்பை அணுகி பின் அதை விஜய் விநியோக உரிமையை வாங்கி கொடுத்தார். ஆனாலும் பலன் இல்லை.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த மெர்சல் திரைப்படம் 2017 தீபாவளிக்கு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது. ஆனால் திட்டமிடப்படாத
செலவு மற்றும் இயக்குனர் அட்லியின் ஊதாரித்தனத்தால் முதலில் போட்ட பட்ஜெட்டை தாண்டி படத்திற்கு செலவு பிடித்தது.
ஆக எல்லா குற்றதிற்கும் காரணம் அட்லீ தான் போல.