இராணுவ வீர்ர் திடீர் துப்பாக்கி சூடு.. 17 பொதுமக்கள் பரிதாப பலி..

தாய்லாந்து நாட்டில் உள்ள ஷாப்பிங் மார்க்கெட்டில் இராணுவ வீரர் துப்பாக்கிசூடு நடத்தியதில் 17 பேர் துடிதுடித்து பலியாகியுள்ளனர்.

தாய்லாந்து நாட்டில் உள்ள கோராட் என்ற பகுதியில் இருக்கும் ஷாப்பிங் மார்க்கெட் பகுதியில் இராணுவ வீரர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

ஷாப்பிங் மார்க்கெட் பகுதியில் நுழைந்த இவர், பொதுமக்களை குறிவைத்து கண்மூடித்தனமாக அரங்கேற்றிய துப்பாக்கி சூட்டில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர்.


மேலும், இது தொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தாக்குதலில் இடப்பட்ட ஜக்ராபந்த் தொம்மா பொதுமக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.