திருப்பத்தூர் ஜோலார் பேட்டையில் தன்னுடைய தம்பி மனைவியிடம் அத்துமீறி உறவு கொண்ட கணவரை அவரது மனைவியேக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் குடிப்பழக்கத்துக்கு மிகவும் அடிமையாகி அவரது வீட்டுக்கே வராமல் இருந்துள்ளார். அப்படியே வந்தாலும் கூட எப்பொழுதும் பிரச்சனை செய்வதையே வாடிக்கையாக கொண்டு தொந்திரவு கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீஸார் அவருடைய மனைவியான நித்யா மற்றும் நித்தியாவின் தம்பி அரவிந்தன் ஆகியோரின் மீது சந்தேகமடைந்து அவர்களை விசாரிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரும் ஒரு அதிர்ச்சியான தகவலை சொல்லியுள்ளனர். குடிபோதையில் நித்தியாவின் தம்பி அரவிந்தனின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார் என்றும், நித்யாவிற்கு மேஸ்திரி கணபதி என்றவருடன் உறவு இருந்ததாகவும், அதற்கு ரமேஷ் தடையாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
எனவே, கணபதி, அரவிந்தன், நித்யா மூன்று பேரும் சேர்ந்து ரமேஷிற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருக்கின்றனர். ஆனால், அவர் மயக்கம் மட்டுமே அடைந்துள்ளார். அதன் பின்னர் சம்பவ தினத்தில், மீண்டும் ஏரிக்கரைக்கு அழைத்து சென்று மீண்டும் விஷம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை எனவே, தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றதாக நித்யா வாக்குமூலம் அளித்துள்ளார்.