சின்னத்திரையில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்து முதலில் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்து கொண்டு இருந்தவர் போஸ் வெங்கட். தற்போது இவர் கன்னிமாடம் என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து ஐயப்படுகிறது. இந்த படத்திற்கு ஹாரிசாய் என்பவர் இசைமைக்கிறார்.
இதை தொடர்ந்தும், குறுகிய காலத்திலே சிறப்பாக நடித்து தற்போது ஒரு காமெடி நடிகராக வளம் வருபவர் தான் ரோபோ சங்கர். இவர் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் ஹிட் கொடுத்து, தமிழ் படங்களிலும் அவரது திறமையை வெளிப்படுத்தி சிறந்த காமெடி நடிகராக தனது தடத்தை பதித்தார். தனுஷ்-ன் மாறி திரைப்படத்தில் இவர் நடித்த நகைச்சுவை கதாபாத்திரம் இவருக்கு பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது.
இந்த நிலையில், போஸ் வெங்கட் இயக்குகின்ற கன்னி மாடம் என்ற திரைப்படத்தில், மூனு காலு வாகனம் என்ற பாடலை முதன் முறையாக பாடி, பின்னணி பாடகராக முதன்முறையாக தடத்தை பதித்துள்ளார் ரோபோ சங்கர்.
இது குறித்து, அவர் கூறுகையில் இதுவரை என்னை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள், இனிமேல் பாடகராகவும் ஆதரவு தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.