WhatsApp Pay வசதி தொடர்பாக வெளியான தகவல்

பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பே எனும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்வதற்கு நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றது.

எனினும் பயனர்களின் பாதுகாப்பு கருத்தி இதற்கான அனுமதியை வழங்குவதற்கு இந்திய அரசு தாமதம் காட்டிவந்தது.

இந்நிலையில் குறித்த வசதியானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அனுமதியை National Payments Corporation of India (NPCI) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் 10 மில்லியன் வரையானவர்கள் இவ் வசதியை ஆரம்ப கட்டத்தில் பெறவுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் வாட்ஸ் ஆப் பயனர்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாட்ஸ் ஆப் பே ஆனது கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் என்பவற்றுடனும் இணைந்து சேவையை வழங்கவுள்ளது.