நீங்கள் யூடியூப் தளத்திற்கு அடிமையானவரா? நீங்கள் மாத்திரமன்றி உலகளவில் பெருமளவானவர்கள் இதற்கு அடிமையாகவே இருக்கின்றார்கள்.
நாள்தோறும் இத் தளத்தில் வீடியோக்களை பார்வையிடுவதால் எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக யூடியூப் மாறிவிட்டது.
இவ்வாறான யூடியூப்பில எதிர்வரும் மார்ச் மாதம் முதல் பாரிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.
இதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட யூடியூப் தளத்தின் Classic இடைமுகம் ஆனது நிறுத்தப்படவுள்ளது.
இம்மாற்றம் யூடியூப் இணையத்தளத்தில் மாத்திரம் இடம்பெறும்.
எனினும் யூடியூப் அப்பிளிக்கேஷன்களை வழமை போன்றே பயனர்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.