மொபைல் சாதனங்களுக்கான கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி

தொழில்நுட்ப ஜாம்பவான் ஆன கூகுள் மொபைல் சாதனங்களுக்கான புதிய கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இப் புதிய பதிப்பில் நட்சத்திரங்களை பார்வையிடக்கூடிய புதிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பினை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் மக்களின் எதிர்பார்ப்பினை கருத்தில்கொண்டு நட்சத்திரங்களை பார்வையிடும் புதிய வசதியினை கூகுள் ஏர்த்தில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஏர்த் அப்பிளிக்கேஷனில் தென்படும் பூமியியை சிறிதாக்குவதன் மூலம் அதனைச் சுற்றியுள்ள நட்சத்திரக்கூட்டங்கள் மற்றும் பால்வெளியினை முப்பரிமாண முறையில் பார்வையிட முடியும்.

அத்துடன் இதற்காக பூமியிலிருந்து 30,000 மைல்கள் தொலைவு வரை தென்படக்கூடியதாக படம் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.