மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலி சுரங்கத்தில் விஜய் ரசிகர்கள் அதிகளவு திரண்டுள்ளனர். முன்னதாக நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வந்த மாஸ்டர் படப்பிடிப்பின்போது, வருமான வரித்துறையினர் நடிகர் விஜயை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து இது தொடர்பான விஷயத்தை அறிந்த ரசிகர்கள், வருமான வரிசோதனையை நிறைவு செய்து வந்த விஜய்யை காணுவதற்கு திரண்டு கொண்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் என்.எல்.சி சுரங்க வாயிலின் முன்னதாக திரண்டபடி தங்களின் அன்றாட பணியை விட்டுவிட்டு காத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் ரசிகர்களுடன் பேச ஏற்பாடு செய்திருந்தாக தகவல் வெளியானது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காரில் வந்து இறங்கிய விஜய், முதலில் ரசிகர்கள் மத்தியில் தனது அலைபேசியில் செல்பி எடுத்து வைத்துக்கொண்டார்.
வருமானவரி சோதனைக்கு பின் படப்பிடிப்பு திரும்பிய
வருமானவரி சோதனைக்கு பின் படப்பிடிப்புக்கு திரும்பிய நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்காக வேன் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்தார்.
Publiée par Seithi Punal sur Dimanche 9 février 2020
கதவிற்கு அந்த பக்கமாக இருந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்த நிலையில், ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் ஆர்வம் மிகுதியின் காரணமாக காவல் துறையினர் சிறிது தடியடி நடத்தினர். பின்னர் விஜயின் கார் மற்றும் திரைப்பட நடிகர்கள் பணியாளர்களின் கார் வெளியே சென்றது. காரின் பின்னாலேயே ரசிகர்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.