இந்திய அளவில் சாய் பல்லவிக்கு கிடைத்த பெருமை!

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.

தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களில் பிசியாக நடித்து வந்தவர் தற்போது தெலுங்கில் ‛லவ்ஸ்டோரி, விராத பர்வம்’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள 30 வயதுக்கு உட்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகை சாய் பல்லவி 27வது இடம் பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர், வேறெந்த தென்னிந்திய நடிகையும் இதில் இடம்பெறவில்லை.

இத்தகவலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சாய் பல்லவி.