வருமான வரித்துறை சோதனைக்கு பின் ரசிகர்களை சந்தித்து செல்ஃபி எடுத்த நடிகர் விஜய்..

கடந்த நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஒரு ரூபாய் கூட விஜய் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றவில்லை. அவர் தான் வரி கட்டியதற்கான ஆதாரங்களை சரியாக வைத்து இருந்துள்ளார். தன்னுடைய சம்பளத்திற்கான ரசீதுகளையும் அவர் சரியாக வைத்து இருக்கிறார் என்று தகவல்கல் வெளியானது.

ஆனால், கணக்கில் வராத நிறைய கோடிக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்படதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில், இது தொடர்பான விஷயத்தை அறிந்த ரசிகர்கள், வருமான வரிசோதனையை நிறைவு செய்து வந்த விஜய்யை காணுவதற்கு திரண்டு கொண்டு இருந்தனர்.

இவர்கள் அனைவரும் என்.எல்.சி சுரங்க வாயிலின் முன்னதாக திரண்டபடி தங்களின் அன்றாட பணியை விட்டுவிட்டு காத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் விஜய் ரசிகர்களுடன் பேச ஏற்பாடு செய்திருந்தாக தகவல் வெளியானது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காரில் வந்து இறங்கிய விஜய், முதலில் ரசிகர்கள் மத்தியில் தனது அலைபேசியில் செல்பி எடுத்து வைத்துக்கொண்டார்.

கதவிற்கு அந்த பக்கமாக இருந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்த நிலையில், ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் ஆர்வம் மிகுதியின் காரணமாக காவல் துறையினர் சிறிது தடியடி நடத்தினர். பின்னர் விஜயின் கார் மற்றும் திரைப்பட நடிகர்கள் பணியாளர்களின் கார் வெளியே சென்றது. காரின் பின்னாலேயே ரசிகர்கள் ஓடியுள்ளனர்.