40 வயதில் குண்டாக இருந்தால் இந்த 4 வகை புற்றுநோய் வருமாம்..!!

உலகம் முழுவதிலும் வியாபித்திருக்கிற ஒரு பிரச்சனையாக இந்த உடல் பருமன் இருக்கிறது.

நம்முடைய உணவு முறை பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் உடல் பருமனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விளைவு ஏகப்பட்ட உடல் நல பிரச்சனைகள் வருகின்றன.

இந்நிலையில் இது பற்றி சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளில் “உடல் பருமன் 40 வயதிற்குள்ளானவர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் இருக்கிறது” என கண்டறியப்பட்டுள்ளது.

40 வயதிற்கு முன்னர் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்து 70 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் சிறுநீரக செல் புற்றுநோய்க்கு அபாயம் 58 சதவீதம் இருப்பதாகவும், 29 சதவீதம் பெருங்குடல் புற்றுநோய் ஆபத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது .

இந்த புற்றுநோய் அபாயம் ஆண், பெண் வித்தியாசமின்றி இருபாலருக்கும் இருக்கிறது என கூறப்படுகின்றது.

இந்த ஆராய்ச்சிக்காக நார்வேயில் உள்ள பெர்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட 3 வருடங்கள் நடத்தப்பட்டது.

அதில் அவர்களுக்குப் புற்றுநோய் இருப்பதும் 40 வயதிற்கு முன்பாக அவர்கள் அதிக உடல் எடையுடன் உல் பருமனால் அவதிபட்டுக் கொண்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும் மாதவிடாய் நின்ற உடல் பருமன் உடைய பெண்களுக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோய், மார்பக புற்றுநோயும், சிறுநீரக புற்றுநோய், குடல் புற்று நோய் வரும் அபாயம் அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.