நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானவர். இவர் சில படங்களில் கவர்ச்சியாக இறங்கியும் நடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, தற்போது நடிகைகள் என்றாலே படவாய்ப்புகள் குறைந்து விட்டால் பொதுவாகவே அடுத்து கவர்ச்சி காட்ட இறங்கி விடுவார்கள். ஆனால், இவர் நடிப்பை மட்டும் நம்பாமல் திறமைகளையும் வளர்த்து வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் மற்ற நடிகைகளை போல இல்லாமல் திறமையை நம்பி செயல் படும் இவரை பாராட்டி வருகிறார்கள்.
இவர் தனியே யூடியூப் சேனல் ஒன்று தொடங்கியிருக்கிறார். அந்த சேனலில் பாடல், நடனம், கலை நிகழ்ச்சி என பல ரசிகர்களுக்கு பிடித்தமான பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவிறக்கம் செய்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் கவர்ச்சிக்கு எதிரானவள் இல்லை. சினிமாவில் கவர்ச்சி ரொம்பவும் முக்கியம். ஆனால் என்னிடம் கவர்ச்சி இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். உடம்பை காட்டும் அளவிற்கான கவர்ச்சியில் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை, என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாபு யோகேஸ்வரன் இயக்கிவரும் தமிழரசன் என்னும் படத்தில், விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ரம்யா நம்பீசன். இவர், பாடகி, நடிகை என்பதை தாண்டி தற்போது ஒரு புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதவாது, குறும்படம் ஒன்றை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த குறும்படம் குறித்து நடிகை ரம்யா கூறுகையில், ”அன்ஹைட் என்ற தலைப்பில், 3 நிமிட படம் ஒன்றை இயக்கி உள்ளதாகவும். காதல் குறித்து வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தும் இந்த படத்தை, 14ம் தேதி வெளியிடுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.