கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு சீன மாணாக்கர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் படித்து வந்த திருசூர், ஆலப்புழா, காசர்கோடு ஆகிய பகுதியில் உள்ள மூன்று மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில், ஆலப்புழாவை சேர்ந்த நபர், தேசிய வைரலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது முழுவதும் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை சார்பாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருசூரை சேர்ந்த நபரும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் இருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிற்கு திரும்பிய மற்ற 15 மாணாக்கர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும், சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.
இந்நோய் தொடர்பாக 3367பேர் அம்மாநிலத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 364பேருக்கும் சோதனை செய்ததில் 337பேருக்கும் இல்லை என்று உறுதி செய்து பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
மாநில அவசர நிலையை அரசு திரும்ப பெற்றாலும் தற்போதும் விழிப்புடனே இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.