சிரியாவில் எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் சிரியா அரசு அரபு விமானப்படைக்கு சொந்தமானது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இட்லிப் நகரத்தில் உள்ள அல்-நயராப் வன்வெளியில் ஹெலிகாப்டர் பறந்துக் கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் துருக்கி இராணுவத்தால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறித்த வீடியோவில், நடுவானில் சுடப்பட்டு தீப்பிடித்து எரியும் விமானம், தொடர்ந்து முழுவதுமாக எரிந்து தரையில் விழுந்து நொறுங்குகிறது.
This is the last moments before crash and death of the crew members of this Mi-17 utility helicopter of #Syria Arab Air Force which was shot-down over Al-Nayrab, #Idlib by #Turkish Army. Pilots were doing their best to survive but fire spread and separated the tail boom. pic.twitter.com/DrdQulVVia
— Babak Taghvaee (@BabakTaghvaee) February 11, 2020
ஹெலிகாப்டரில் பயணித்த குழுவினர் தப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டு இருந்தாலும், முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகிறது.
எனினும், சம்பவம் தொடர்பில் தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.