விழுப்புரம் மாவட்டம் தெற்கு ரயில்வே காலனி பகுதியில் இளம்பெண் ஒருவரின் முகம் சிதைக்கப்பட்டு, நிர்வாணமான நிலையில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக விசாரணையில் 17 வயது சிறுவனுக்கு தொடர்ப்பு இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அச்சிறுவன் ரயில்வே நிலையத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்த்து வந்த நிலையில், அந்த பகுதியில் பிச்சை எடுக்கும் பெண்ணிடம் இரவு நேரத்தில் சிலர் பணம் கொடுத்து உல்லாசமாக இருப்பதை கண்டு உள்ளான்.
இதைப் பார்த்த அந்த சிறுவனுக்கும் அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்க ஆசை வந்துள்ளது. இதனால் தன்னிடம் இருந்து 50 ரூபாய் பணத்தை காட்டி, அந்த பெண்ணை ரயில்வே காலனி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது அந்த பெண் உல்லாசமாக இருக்க 500 ரூபாய் கேட்டுள்ளார்.
தன்னிடம் 50 ரூபாய் மட்டும்தான் இருப்பதாக சிறுவன் கூறியதும், அந்த பெண் உல்லாசத்திற்கு மறுத்துள்ளார். மேலும் நீ சிறுவன் என்பதால், உன்னுடைய பெற்றோரிடமும் காவல்துறையிடம் சொல்லி விடுவதாக அப்பெண் மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் அப்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். அந்த சிறுவனை காவல்துறை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.