அந்தரங்கப் பகுதிகளில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை சரிசெய்ய வேண்டுமா?

ஆண் , பெண் இருவருக்குமே அந்தரங்கப் பகுதிகளில் ஈஸ்ட் தொற்றுக்கள் ஏற்படுவது வழக்கமாகும்.

அவை ஏற்படாமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம் என்று இங்கே பார்க்கலாம்.

  • ஆப்பிள் சிடார் வினிகர் ஈஸ்ட் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முக்கியமாக பங்கு வகிக்கிறது.
  • காலிஃப்ளவர் ப்ரோக்கோலி, கேரட், உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, போன்றவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட் தொற்று நம்மை அண்டாமல் இருக்கும்.
  • தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே லாரிக் ஆசிட் என்ற காரணி உள்ளதால் அது ஈஸ்ட் தொற்று போன்ற சிறிய சிறிய புண்கள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க பெரிதளவில் உதவுகின்றது.
  • பூண்டை பச்சையாக இரண்டு முதல் மூன்று துண்டு பூண்டுகள் தினமும் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. அல்லது காய்கறிகளை வைத்து காய்கறி சாலட் தயாரித்து அதில் இரண்டு அல்லது மூன்று துண்டுகளையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈஸ்ட் தொற்று அண்டவே அண்டாது.
  • தினமும் ஆளி விதைகளும் உங்கள் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொண்டால் ஈஸ்ட் தொற்று போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிடும்.
  • பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர், தயிர், சீஸ். பாலினால் தயாரிக்கப்பட்ட கிரீம், போன்றவற்றை நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள முக்கியமான லாக்டிக் காரணியானது ஈஸ்ட் தொற்று ஏற்படும் பாக்டீரியாவில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
  • மஞ்சள், லவங்கப்பட்டை, போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது. அவை இந்த ஈஸ்ட் தொற்றுக்கள் வராமல் பாதுகாக்க முடியும்.