நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கணுமா?

உயிரை குடிக்கும் நோய்களுள் நீரிழிவும் ஒரு முக்கிய நோயாக கருதப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நீரிழிவால் இறக்க நேரிடுகிறது. இந்தகாலத்தில் நீரிழிவு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படுகின்றது.

நீரிழிவைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் இருந்தாலும், அது மட்டும் போதுமானதல்ல. இதற்கு தினசரி உணவில் மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க முடியும்.

அந்தவகையில் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கும் சில உணவு பற்றி பார்ப்போம்.

  • நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சாலட், பரோட்டா , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு மற்றும் சில காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து சாலட் போல் உண்பதால் அதன் நன்மைகள் உங்களுக்கு அப்படியே கிடைக்கின்றன.
  • பாகற்காய், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாலிபெப்டைடு – பி அல்லது பி-இன்சுலின் என்னும் கூறு பாகற்காயில் உள்ளது. இதனால் நீரிழிவு கட்டுப்படுகிறது.
  • கோதுமைக்கு மாற்றாக நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகைப் பயன்படுத்தலாம். நோயாளிகள் ராகி தோசை அல்லது ராகி பரோட்டா செய்து சாப்பிடலாம்.
  • நெளி கோதுமை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய உணவாக இது கருதப்படுகிறது. குறைந்த க்ளைசீமிக் குறியீடு கொண்ட இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மையை அளிக்கிறது.