இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளைவிட்டுவிட்டு கனடாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்க வந்திருக்கிறார்கள்.
அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விடயத்தில், கண்ணை இறுக மூடிக்கொண்டு, அவர்களுக்கான உதவிகளை செய்துவருகிறது கனேடிய பல்கலைக்கழகம் ஒன்று.
அது, கனடாவின் Newfoundland என்ற இடத்திலிருக்கும் Memorial University என்ற பல்கலைக்கழகம்.
பங்களாதேஷிலிருந்து 11,000 கிலோமீற்றர்கள் பயணித்து நாட்டையும் வீட்டையும் விட்டு இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்திருக்கிறார் Hridisha Arif. அவரைப்போலவே பலர், குறிப்பாக ஆசிய நாட்டவர்கள், கல்வி கற்க அவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு காரணம்?
MUN என்று அழைக்கப்படும் Memorial University என்ற பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் வெறும் 11,460 டொலர்கள்தான்.
ஆகவே, இந்தியா, இலங்கை, சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து மட்டும் சுமார் 1,700 மாணவர்கள் இங்கு பயில்கிறார்கள்.
சரி, ஒரு மாணவருக்கான கல்விக்கட்டணம் 26,000 டொலர்களுக்கும் அதிகம் என்று இருக்கும் நிலையில், எப்படி MUN பல்கலைக்கழகத்தால் சர்வதேச மாணவர்களுக்கு மட்டும் குறைந்த கல்விக்கட்டணத்தில் கல்வி வழங்க முடிகிறது?
அதற்கான பதில், மாகாண அரசு அள்ளி வழங்கும் பெரிய உதவித்தொகைதான்… ஆம், இந்த ஆண்டில் மட்டுமே, வரி செலுத்துவோர், MUN பல்கலைக்கழகத்திற்கான செலவுகளுக்காக, 308 மில்லியன் டொலர்களை அள்ளி வழங்க இருக்கிறார்கள்.
ஆகவே, தங்களுக்கு உதவிய மாகாணத்திற்கு பதில் உதவியாக, Hridisha Arif போன்ற மாணவர்கள் Newfoundland மற்றும் Labradorஇலேயே தங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள படம் ஒன்றில், இலங்கையரான பொறியியல் பேராசிரியர்George Mann தன் மாணவர்கள் சிலருக்கு பயிற்சி அளிப்பதைக் காணலாம்.
George Mannஐப் போலவே இலங்கை மாணவர்கள் பலரும் இங்கு கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.