உலகின் மிகப்பிரம்மாண்டமான மொபைல் கண்காட்சி நிகழ்வு

வருடம் தோறும் புதிதாக உருவாக்கப்படும் மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்து வைப்பதற்காக மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் எனும் நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் இந்நிகழ்வானது பார்ஸிலோனாவில் இம் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் இடம்பெறவிருந்த நிலையிலேயே தீடிரெனக் கைவிடப்பட்டுள்ளது.

இத் தகவலை GSM Association (GSMA) உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அடுத்த மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பார்ஸிலோனாவிலேயே இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தாக்கமே இந்நிகழ்வு தடைப்படுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 25 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளதுடன், 42,000 வரையானவர்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.