உடம்பில் வீசும் வியர்வை நாற்றத்தைப் போக்க வேண்டுமா?

உடல் உஷ்ணம்தான், தோலின் வியர்வைச் சுரப்பிகள் வழியாக திரவ வடிவில் வெளியேறுகிறது.

சாதாரணமாக புழுக்கம், பயம், பதற்றம் போன்ற நேரங்களில் இந்தச் சுரப்பிகளின் செயல்பாடு அதிகமாக இருக்கும்.

சிலருக்கு எப்போதும் வியர்த்துக்கொண்டே இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால், அக்குள் போன்ற பகுதிகள் ஈரமாகவே காணப்படும்.

இதனால் சில சமயங்கள் வியர்வை வெளியில் நாற்றத்தை ஏற்படுத்தும். இது அருகில் இருப்பவர்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.

இதனை எளிய வழியில் கட்டுப்படுத்த கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • கிருமி நாசினியான மஞ்சள் கிழங்கை உரசி அக்குளில் தடவி வந்தால் வியர்வை நாற்றம் மறைந்து மஞ்சள் மணம் கமழும்.
  • ஒரு பக்கெட் தண்ணீரில் தக்காளியைப் பிழிந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிப்போகும்.
  • தக்காளி, கற்றாழை, எலுமிச்சை எல்லாம் போட்டதும் வியர்வை நாற்றம் படிப்படியா குறையும்.
  • புதினாவை ஊறவைத்து அக்குளில் தடவி குளித்து வந்தால் வியர்வை வாடையும் இருக்காது.
  • குளிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து குளித்து வந்தால் உடலில் இருக்கும் துர்நாற்றம் நீங்கும். அக்குளில் வெளிவரும் கெட்ட வாடையை நீக்கி நல்ல மணமூட்டியாக இருக்கும்..
  • அக்குளில் அதிகப்படியான நாற்றம் இருந்தாலும் கெட்டியான பசுந் தயிரைக் குழைத்து அக்குள் மற்றும் உடல் எங்கும் பூசி குளித்து வந்தால் வியர்வை வெளியேறி விடுவதோடு சருமத்தின் அழகு அதிகரிக்கும்.
  • கற்றாழையை எப்போது வேண்டுமானாலும் அக்குளில் தடவி கொள்ளலாம். இது நாள் முழுவதும் வியர்வை வாடையிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கும்.