தாம்பத்திய உறவால் இந்த நோயும் பரவுமா? அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம்

ஆரோக்கியமாய் வாழ்வது மிகவும் அவசியம். புதுப்புது நோய்கள் பரவும் இந்த நவீன காலத்தில் உடல் நலன் மீதான விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

அதே வேளையில் பாலியல் உறவு கொள்வதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. முறையற்ற உறவுகள் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் என்பது நாம் அறிந்ததே.

தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள்.

இது எப்படி என பலருக்கும் கேள்வி வரலாம். தவறில்லை.

ஸ்பெயினில் உள்ள பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அச்சமயம் தன் ஆண் துணையும் உடலுறவில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.

ஆனால் உடலுறவால் டெங்கு காய்ச்சல் பரவும் என்பதை ஆய்வாளர்கள் நம்பவில்லை. இந்நிலையில் க்யூபா, டொமினிக் குடியரசு நாடுகளுக்கு சென்று வந்த அவரை நாடு திரும்பிய அவரை மருத்துவர்கள் அவரின் விந்தணு பரிசோதனை செய்தபோது அவருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் தான் உடலுறவாலும் டெங்கு காய்ச்சல் பரவும் என கண்டுபிடித்துள்ளனர்.