திருமண நிச்சயதார்த்தை வீடியோ காலில் செய்து வைத்த பெற்றோர்கள்.. வைரலாகும் காணொளி..!

இன்றைய நவீன உலகத்தில், ஆன்லைன் வளர்ச்சி பெரிதும் வளர்ச்சியடைந்துவிட்டன. குறிப்பாக மனிதனுக்கு தேவையான அனைத்து அடிப்படையான விஷயங்களுமே, ஆன்லைனில் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது உள்ள மக்கள் திருமணம் கூட ஆன்லைனில் செய்துவிடுவார்கள் போல என கூறி வந்தனர். ஆனால் அதனையும் தாண்டும் விதத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்னதாக நிச்சயதார்த்த விழாவிற்காக பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், இருவராலும் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் உருவானது. எனவே பையனுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சயதார்த்தம் செய்வது என முடிவு செய்துள்ளனர்.

இதனால், ஒரு செல்போனில் வீடியோ காலில் பெண் இருக்க, மற்றொரு செல்போனில் வீடியோ காலில் இளைஞர் இருக்க இருவருக்கும் முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றது. குடும்பத்தினர் பெண்ணுக்கு நெற்றியில் குங்குமம் வைப்பதற்கு பதிலாக, செல்போனுக்கு வைத்தனர்.

பெண்ணுக்கு தலையில் பட்டு துணியை போடுவதற்கு பதிலாக, செல்போனுக்கு அதை அணிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.