போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கத்தியை எடுத்து குத்தி தோலை தனியாக உரித்தெடுத்து கொலை செய்துள்ள சம்பவம் பதபதைக்க வைத்துள்ளது.
மெக்சிகோ நகரைச் சேர்ந்தவர் எரிக் பிரான்சிஸ்கோ ரோப்லெடோ என்ற 46 வயதான இவருக்கு 25 வயதில் மனைவி உள்ளார். இவர்களுக்கு வயது பொருத்தம் காரணத்தினால் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.
இந்த வாக்குவாதம் கடுமையான வாக்குவாதமாக முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் சமையலறைக்குச் சென்று அங்கிருந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து தன்னுடைய மனைவியின் கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்து இருக்கின்றார்.
அதன் பின்னர், ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அவருடைய தலை முதல் கால் வரை உரித்து உடல் உறுப்புகளை வெட்டி அங்கு இருந்த கால்வாயில் வீசி எறிந்து இருக்கின்றார்.
மேலும், வீட்டில் கொலை செய்ததற்கான தடங்களை எல்லாம் மறைத்துவிட்டு பின்னர் தன்னுடைய முன்னாள் மனைவிக்கு இதுகுறித்து போன் செய்து தெரிவித்திருக்கின்றார்.
இதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த அவருடைய முன்னாள் மனைவி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக விரைந்து அவருடைய வீட்டிற்கு வந்து இழந்த உடல்பாகங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.
பின்னர், அவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர்.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், தோல் உரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் சடலம் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. அதை அந்நாட்டு ஊடகங்களும் பயன்படுத்தியிருந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.