காதலர் தினம் எப்படி வந்தது.?

லகம் முழுவதும் இன்று காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஒருவரது இறந்தநாளை தான் நாம் அனைவரும் காதலர் தினமாக கொண்டாடுகிறோம் என்று எத்தனை பேருக்கு தெரியும்.?

தமிழில் காதலர் தினம் என்றும் ஆங்கிலத்தில் வாலண்டைன்ஸ் டே என்று கூறுகிறோம். அதற்கு ஒரு காரணம் உண்டு. கிபி 200-300 ஆம் ஆண்டில் ரோம் நாட்டின் வாழ்ந்து வரும் ஒரு புனிதர் ஒருவரின் பெயர்தான் valentine’s.  ரோம் நாட்டை ஆண்ட கிளாடியஸ் என்பவர் அந்நாட்டு ராணுவ வீரர்களை தன் நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்றும் அவர்கள் வேறு நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விதியை வைத்திருந்தார்.

அப்போது புனிதராக இருந்த வாலண்டைன்ஸ் ராணுவ வீரர்களுக்கு வேறு நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்க உதவி செய்து கொண்டிருந்தார். இந்த தகவல் கிளாடியஸ்க்கு சென்றது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது அவர் சிறையில் இருக்கும் போதும், சிறை பாதுகாவலரின் மகள் ஒருவர் கண் (பார்வையற்ற பெண்ணொருவர்) வாலண்டைன்ஸ்க்கு தினமும் சாப்பாடு அளித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு அந்த பெண்ணின் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, கி.பி.270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 நாள் கண்பார்வையற்ற அந்த பெண்ணிற்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. அப்போது வேலன்டைன்ஸ் இறந்துவிட்டார். அவரது கையில் “From Your வேலண்டைன்” என்று எழுதப்பட்ட காதல் கடிதம் ஒன்று இருந்தது இந்த நாளைத்தான் நாம் அனைவரும் காதலர் தினமாக கொண்டாடுகிறோம்.