தண்ணீருக்குள் குழந்தையை பெற்றெடுத்த அஜித் பட நடிகை..!!
புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண்ணான கல்கி கோச்சலின் தேவ் டி, சைத்தான், த்ரிஷ்னா, ஷாங்காய், ஹேப்பி என்டிங், கல்லி பாய் உட்பட பல இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக் காஷ்யப்பும் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த இவர்கள், 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
கல்கி கோச்சனுக்கு நன்றாகத் தமிழ் தெரிந்தும் தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் வரவில்லை என கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.
இதற்கிடையே, கல்கி கோச்சன் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கய் ஹெர்ஸ்பர்க் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருமே திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தற்போது கல்கி கர்பமாகியுள்ளார்.
தான் தாய்மை அடைந்திருப்பதை பற்றி உருக்கமாக பேசியிருக்கும் கல்கி. அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமான வயிற்றைக் காண்பித்தபடி புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். அவருக்கு அழகா பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இது குறித்து அவர் மீது பல விமர்சங்கள் வந்து சேர்ந்தது.
இந்த நிலையில, தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தண்ணீரில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த முறை பற்றிய நன்மைகளை அவர் விளக்கி ட்விட் செய்துள்ளார்.